கார் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. என்கையில் கார் பயணம் விரும்புவோர் எண்ணிக்கையும் கூடிவிட்டது. கார், பைக் உட்பட சொந்தமாக அல்லது குடும்பமாக, தனியாக பயணிக்கும் மக்களை மனதில் கொண்டே ‘ஹைவே வெதர்’ (Highway Weather) என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் சென்னை- பாண்டிச்சேரி பயணிக்கிறீர்கள் எனக் கொள்வோம். இந்தச் செயலியில் உங்கள் சென்னை லோகேஷனிலிருந்து பாண்டிச்சேரி எனக் கொடுத்தால் இடையில் ஓய்வெடுக்கத் தகுந்த ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர சிசிடிவி கேமராக்கள், டோல்கள், குறிப்பாக ஆரம்பிக்கும் இடம் முதல் போய் சேரும் வரையிலான காலநிலை, எப்படி உள்ளது அல்லது எப்படி இருக்கும் என அனைத்தும் கொடுக்கிறது இந்த ஹைவே வெதர் செயலி. ஒருவேளை சேருமிடத்தில் அதீத மழை அல்லது பனிப்பொழிவு உள்ளது எனில் முன்பே அதற்கான பயணத் திட்டமிடல்களை செய்துகொள்ள ஏதுவான டிப்ஸ்களையும் இந்தச் செயலி கொடுக்கிறது. குடும்பமாக குழந்தைகள், வயதானவர்கள் சகிதமாக கிளம்புவோருக்கு இந்த மொபைல் செயலி அருமையான ஒன்று.
ஆஹா தர்ப்பைப்புல்
தர்ப்பைப் புல்லை எடுத்துச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்துவர தாகம், உடல் அரிப்பு ஆகியவகை குணமாகும். தர்ப்பைப் புல்லைக் கஷாயமாக்கிக் குடித்து வர ரத்தம் சுத்தமாகும். இதனை வாரம் 1 முறை 30 முதல் 50 மில்லி அளவு பருக வேண்டும். தர்ப்பை வேரை நிழலில் உலர்த்திப் பொடிச் செய்து பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உடலுக்கு மிகுந்தக் குளிர்ச்சி உண்டாகும். பித்தத்தைத் தணிக்கும். வெள்ளை நோய் குணமாகும். தர்ப்பைப்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு பாலில் கலந்து குடித்துவர பிரசவித்த தாய்மார்களுக்கு அதிகமாய் பாலைச் சுரக்கச் செய்யும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தை தினமும் பருகி வர சிறுநீரைப் பெருகச் செய்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
– N. குப்பம்மாள்
The post ஹைவே வெதர்! appeared first on Dinakaran.