'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடிய ஷாருக்கான் - வீடியோ வைரல்

3 months ago 74

2024-ம் ஆண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 27 அன்று தொடங்கிய இந்த விழா மூன்று நாட்கள் நடைபெற்று நேற்றுடன் நிறைவடைந்தது.

அதில் சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த விருது விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் விக்கி கவுஷல் ஆகியோர் இணைந்து புஷ்பா படத்தில் சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' (தெலுங்கு) பாடலுக்கு நடனமாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தநிலையில், ஷாருக்கான் மற்றும் விக்கி கவுசல் ஆடிய அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். அதில், இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் கனவில் கூட இதை நினைத்து பார்த்ததில்லை என்று சமந்தா பதிவிட்டுள்ளார். 

Read Entire Article