அக்டோபர் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

3 months ago 76

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே..

தலைக்கனம் இல்லாதவர் நீங்கள். பணிவு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து நடப்பவர்.

சிறப்புப் பலன்கள்

வேலைக்குச் செல்லும் உத்யோகஸ்தர்கள் தங்கள் பணியில் இருந்த குழப்பங்கள் தீரும். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உயர் அதிகாரிகள் தங்கள் பணியை பார்த்துவிட்டு பாராட்டுவர்.

வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக முதலீடுகளை போட்டு அதிக லாபத்தை ஈட்டுவர். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வர். அதன் மூலம் தாங்கள் லாபத்தை ஈட்டுவர்.

குடும்பத் தலைவிகள் தங்கள் கணவர் வீட்டாருடன் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தை செய்து சமாதானமாவார்கள்.

கலைஞர்கள் தங்கள் சக கலைஞர்களுடன் படப்பிடிப்பின்போது கவனமுடன் பழகுவது நல்லது. யாரிடமும் தேவையற்ற விவாதம் செய்ய வேண்டாம்.

மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவர். வெளி நண்பர்களிடம் சற்று கவனமுடன் நல்லது. பெற்றோர்களின் சொல்படி நடப்பர்.

பரிகாரம்

மாங்காடு காமாட்சியம்மனை வெள்ளிக் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே..

உங்களுக்கு நினைவாற்றல் அதிகம். பொறுமை மிக்கவர் நீங்கள். சிக்கலான விசயத்தினையும் சாதாரணமாக கையாள்வீர்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதனை திட்டமிட்டு முடித்து காட்டி மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வேலை விசயமாக வெளியூர் செல்வீர்கள்.

வியாபாரிகளுக்கு தாங்கள் நினைத்த வியாபாரம் நல்லபடியாக முடிந்து நல்ல வருவாய் கிடைக்கும். இறைச்சி வியாபாரிகளுக்கு லாபம் இயல்பு லாபம் கிடைக்கும். சில்லரை வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

குடும்பத் தலைவிகள் குடும்பத்தை பராமரிப்பதில் உங்கள் நிர்வாகத்திறமைப் பளிச்சிடும். மாமியார் மருமகள் உறவு சமாதானமாக செல்லும். மற்றபடி வீடு கட்டும் திட்டம் நிறைவேறும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தங்கள் படம் முடிந்தும் இன்னும் வெளிவர இல்லாமல் இருப்பவர்களுக்கு தாங்கள் அதற்குண்டான முயற்சிகள் விரைவில் பலிக்கும்.

மாணவர்கள் தங்கள் படிப்பில் எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண்களை எடுக்கின்றீர்களோ அந்த பாடத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க உதவும்.

பரிகாரம்

நரசிம்மரை புதன் கிழமை அன்று தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து தரிசிப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே..

ஒருவரை ஒரு முறை பார்த்தாலே போதும் உங்கள் நினைவில் பதிய வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர் நீங்கள். ஞாபக சக்தி மிக்கவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகஸ்ர்கள் தாங்கள் தங்கள் வேலைகளை முடித்து தங்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமும் தாங்கள் நல்ல மதிப்பையும் பாராட்டையும் பெறுவர்.

வியாபாரத்தில் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்க மற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் தருவீர்கள். அதன் வாயிலாக வாடிக்ககையார்களை உருவாக்குவர்.

குடும்பத் தலைவிகள் தாங்கள் சிக்கன நடவடிக்கை நடடிவக்கைகளை மேற்கொண்டு தங்களின் கணவர் மற்றும் பிள்ளைகளின் அவசரத் தேவைகளுக்காக தாங்கள் செலவிடுவர்.

கலைத்துறையில் உள்ளவர்கள் எப்பொழுதும் தங்கள் எதிர்பாலினரிடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. தேவையற்ற கிசுக்கிசுக்கிளில் இருந்து தப்பலாம்.

மாணவமணிகள் சக மாணவர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு கைகூடும். நீர் நிலைகளின் போதும் மற்றும் உயரமான இடத்தில் இருக்கும்போதும் தாங்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்

நரசிம்மப் பெருமாளை சனிக் கிழமை அன்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே..

வெளியே ஒன்றும் உள்ளே ஒன்றும் வைத்து பழகாதவர் நீங்கள். மனதில் உள்ளதைத்தான் பேசுவீர். பொதுவாக இயல்பாக இருப்பவர் நீங்கள்.

சிறப்புப் பலன்கள்

உத்யோகதர்கள், தங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு அலுவலக வேலைகளில் தங்களுக்கு பக்க பலமாக இருப்பர். நல்ல உறவு மேம்படும். சக ஊழியர்களிடம் தாங்கள் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வெளியூர் மற்றம் வெளிநாடு தொடர்பு ஏற்படும். அதன் மூலம் ஒரு பெரும் தொகை கிடைக்கும். தாங்கள் எதிர்பார்த்த எதிர்பார்த்த வருவாயும் கிடைக்கும்.

குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தங்கள் கணவர் வீட்டார் உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.

சின்னத்திரை மற்றும் சினிமாப் படத்துறையில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வேலை வாயப்பு கிடைக்கும். நல்ல பெயரும் பாராட்டையும் பெறுவீர்கள்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது சகமாணவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது அவசியம். யாரையும் விட்டுக் கொடுக்காமல் பழகும்போது நட்பு பலப்படும்.

பரிகாரம்

முருகப்பெருமாளை செவ்வாய் கிழமை அன்று தரிசிப்பது நல்லது. முடிந்தால் சிவப்பு மலர் மாலையை கொடுப்பதும் நல்லது.

கணித்தவர்:

திருமதி. N.ஞானரதம்

Cell 9381090389

Read Entire Article