ஹைதராபாத்தில் ‘தொகுதி மறுவரையறை ஜேஏசி’-யின் அடுத்தக் கூட்டம்: தெலங்கானா முதல்வர் தகவல்

1 month ago 4

சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேஏசி) அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, "இந்தப் பிரச்சினையை டெல்லி அளவில் எடுத்துச் செல்வோம். இரண்டாவது கூட்டம் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மூடிய கதவு கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் இரண்டும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இது பொதுமக்கள் சார்ந்த பிரச்சினை. எனவே, இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறோம்" என தெரிவித்தார்.

Read Entire Article