சென்னை: தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி இன்று காலமானார். புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிசாசு, ரஜினி முருகன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி நடித்துள்ளார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்.
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். மேலும் சில நடிகர்கள் நிதியுதவி செய்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது.
The post குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி காலமானார் appeared first on Dinakaran.