'ஹால் ஆப் பேம்'; டி வில்லியர்ஸ் உட்பட 3 நட்சத்திரங்களை கவுரவப்படுத்திய ஐ.சி.சி

3 months ago 22

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 'ஹால் ஆப் பேம்' என்ற பட்டியலில் இணைத்து கவுரவம் அளித்து வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி அந்த கவுரவமிக்க பட்டியலில் புதிதாக 3 பேரை சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் இங்கிலாந்து அணியின் அலெஸ்டைர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய 3 கிரிக்கெட் நட்சத்திரங்களை 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவப்படுத்தி உள்ளது.

இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே, சச்சின், வினோ மன்கட், சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கவுரவத்தை பெற்றுள்ளனர்.சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் இந்த கவுரவத்துக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Three legends of the game unveiled as the newest ICC Hall of Fame inductees

More ⬇https://t.co/0JjbprOoYP

— ICC (@ICC) October 16, 2024


Read Entire Article