'டிமான்ட்டி காலனி 3' - பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பணி

3 hours ago 2

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான படம் 'டிமான்ட்டி காலனி'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து 'டிமான்ட்டி காலனி 2' கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியானது.

இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

'டிமான்ட்டி காலனி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார். இதனால் டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், டிமான்ட்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய இரு பாகங்களை விட மூன்றாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இது இந்த படத்தின் கடைசி அத்தியாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article