ஹார்வர்டு பல்கலை. விவகாரம்: டிரம்ப் விதித்த உத்தரவை தற்காலிமாக நிறுத்திவைத்தது அமெரிக்க நீதிமன்றம்

4 hours ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.

எனவே டிரம்பின் இந்த தடை சர்வதேச அளவில் கவனம் பெற்றது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை தற்காலிமகாக நிறுத்திவைத்துள்ளது.

Read Entire Article