சற்று உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?

5 hours ago 2

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,920- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990- க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article