
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு தினம் இன்று (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தொடர்ந்து, தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பேரோஸ் ஓட்டல், தந்தி ஒன் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். மேலும், சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னை வாழ் நாடார் சங்கத் தலைவர் டி.தங்கமுத்து, சென்னை மாநகராட்சியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சபேஷ் ஆதித்தன், இந்திய நாடார்கள் கூட்டமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், தமிழ்நாடு நாடார்கள் சங்க தலைவர் முத்து ரமேஷ்.