
சென்னை,
தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற தொடர் ஹார்ட் பீட்'. பல எமோஷலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்' வெப் தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகம் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், 2-வது பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இதில் கிரண், கமல், ரோஷினி மற்றும் டி.எம். கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர். 'ஹார்ட் பீட்' சீசன் 2-வை தீபக் சுந்த சுந்தரராஜன் எழுதி இயக்கி உள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டெலி பேக்டரி தயாரித்துள்ள இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வருகிற 22-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.