பரோட்டா பரிமாற மறுத்த ஓட்டல் உரிமையாளருக்கு அடி, உதை

6 hours ago 4

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் அமுல் குமார். இவரது ஓட்டலுக்கு நேற்று இரவு இளைஞர் பரோட்டா சாப்பிட வந்துள்ளார்.

இரவு கடையை பூட்டும் நேரம் வந்துவிட்டதால் பரோட்டா பரிமாற முடியாது வேறு எங்காவது சென்று சாப்பிடும்படி ஓட்டல் உரிமையாளர் அமுல் குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்து சென்ற அந்த இளைஞர் 15 நிமிடம் கழித்து தனது நண்பருடன் ஓட்டலுக்கு வந்துள்ளார். இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

பைக்கில் இருந்து இறங்கிய இருவரும் ஓட்டலுக்கு வந்து அமுல் குமாரிடம் பரோட்டா பரிமாறமாட்டாயா? என்று கூறி அவரை அடித்து உதைத்தனர். இதில், முகம் தலையில் அமுல் குமாருக்கு காயம் ஏற்பட்டது.

அப்போது, அவ்வழியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீஸ் ரோந்து வாகனம் வருவதை அறிந்த அந்த இளைஞர்கள் இருவரும் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் அமுல் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், பரோட்டா பரிமாற மறுத்ததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Read Entire Article