ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து

4 hours ago 2

டெல்லி: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இழுபறியில் உள்ள நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று முன்தினம் இரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான நிலையம் அருகே ஒரு சாலையும், வாகனமும் பலத்த சேதமடைந்தது. அந்த பகுதியில் இருந்த கரும்புகை எழுந்ததால் விமான பயணிகளும், சாலையில் சென்றவர்களும் பீதியடைந்தனர். இந்த தாக்குதலில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குததலை தொடர்ந்து டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article