ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்: காஷ்மீரிலும் காங்.கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு

1 month ago 9

டெல்லி: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல அரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் தொடக்கம் முதலே இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. அந்த வகையில் ஹரியானாவை பொறுத்தவரை ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங். கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 16 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல ஜம்மு-காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி 45 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தனித்து போட்டியிட்ட மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 5 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 2 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார். இதனிடையே காஷ்மீருக்கு காங். மேலிடப் பார்வையாளர்கள் விரைகின்றனர். பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முகேஷ் அக்னி ஹோத்ரி காஷ்மீர் செல்கின்றனர்.

The post ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கிறது காங்கிரஸ்: காஷ்மீரிலும் காங்.கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article