ஹரியானாவில் 3ஆவது முறையாக பாஜக ஆட்சி?.. காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

1 month ago 7

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது. இதில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதிகளில் 3 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 3 கட்ட தேர்தலில் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருந்தது. பின்னர் பின்தங்கியிருந்த பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியை விட முன்னேறியது. தற்போதைய நிலவரப்படி பாஜக 49 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் ஹரியானாவில் 3 வது முறையாக பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. ஹரியானா முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். உச்சனகலன் தொகுதியில் துஷ்யந்த் சவுதாலா வெறும் 2420 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

உச்சனகலன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரிஜ்ஜேந்திர சிங் 14,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும் பா.ஜ.க. 28 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து அடுத்தகட்ட சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

The post ஹரியானாவில் 3ஆவது முறையாக பாஜக ஆட்சி?.. காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை appeared first on Dinakaran.

Read Entire Article