சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீடு ஒன்றில் நுழைந்த திருடர்கள் எச்சரிக்கை மணி அடித்ததால் சிக்கிக் கொண்டனர். வெங்கட்ரமணன் என்பவர் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 4-ம் தேதி மனைவியுடன் நெதர்லாந்து சென்றுள்ளார். மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டில் மோட்டாரை அந்நிய நபர்கள் தொடவே வெங்கட்ரமணன் போனில் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. செல்போன் மூலம் வீட்டு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இருவர் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பல்லாவரத்தை சேர்ந்த பிரபல திருடன் கமலக்கண்ணன் (65), திருப்பத்தூரை சேர்ந்த ஆரி பிலிப் (57) 2 திருடர்களையும் கைது செய்தனர்.
The post வீட்டில் புகுந்த திருடர்கள் எச்சரிக்கை மணி அடித்ததால் கைது appeared first on Dinakaran.