ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

4 weeks ago 5

புதுடெல்லி: ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு பாஜ அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை கடந்த வாரம் ராகுல்காந்தி சந்தித்து பேசியபோது எடுக்கப்பட்டதாகும்.

இந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி 19வயது தலீத் பெண் உயர்சாதியை சேர்ந்த 4 நபர்களால் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேல்சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். பெண்ணின் குடும்பத்தினரின் அனுமதியின்றி பெண்ணின் சடலத்தை போலீசார் வலுக்கட்டாயமாக நள்ளிரவில் எரித்தனர். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு நீதித்துறையை தவறாக வழிநடத்திய பின், இன்று நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதே கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பம் பிணை கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார்கள். தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். உத்தரப்பிரதேச பாஜ அரசு அந்த குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர்களுக்கு அரசு வேலை வழங்கவில்லை. வேறுஇடத்திற்கு மாற்றுவதாக கூறிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த சாதிவெறி மற்றும் அதிகாரப்பிடியில் தலித்துக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவது கூட முடியாத ஒன்றாகிவிட்டது’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஹத்ராஸ் கூட்டு பாலியல் பலாத்காரம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒன்றுமே செய்யவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article