சூரப்பட்டில் ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி

3 hours ago 3

சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாதவரம் அடுத்த சூரப்பட்டு கிராமத்தில், நாளொன்றுக்கு 14 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட நிலையம், கடந்த 1965ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையம், பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு, சுத்திகரிப்பு நிலையம் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Read Entire Article