சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.
சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரான விக்னேஷ் (45) என்பவர் மனைவி தன்யா (40) மற்றும் குடும்பத்தினர் அக்ஷயா (12). அத்வைத் (9) ஆகியோர் பயணித்தனர். காரை மரியதாஸ் (47) என்பவர் ஓட்டினார்.