ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி சாலை சந்திப்பு விரிவாக்க பணிகள் தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

2 weeks ago 1

வில்லிபுத்தூர், ஜன.23: ஸ்ரீவில்லிபுத்தூர் அழகாபுரி சாலை சந்திப்பு பகுதி ரூ.60 லட்சத்தில் அகலப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தை சார்ந்த வத்திராயிருப்பு அழகாபுரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அழகாபுரி சாலை சந்திப்பு மிகவும் முக்கியமான பகுதியாகும். மதுரை, விருதுநகர் போன்ற ஊர்களில் இருந்து சதுரகிரி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இச்சந்திப்பை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை பாதுகாப்பினை உறுதி செய்ய இச்சந்திப்பினை உரிய வழிகாட்டுதலின்படி அகலப்படுத்த ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் 2024-25ன் படி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்சமயம் பணிகள் துவங்கப்பட்டு சாலை விரிவுபடுத்த தேவையான நிலங்களில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.சுமார் ரூ.60 லட்சம் செலவில் சாலை அகலப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சயடைந்துள்ளனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி சாலை சந்திப்பு விரிவாக்க பணிகள் தீவிரம்: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article