தேசிய தொழில்நுட்ப பல்கலை.யில் குரூப் பி, சி பணிகள்

3 hours ago 1

1. Junior Engineer
i) Civil- 2 இடங்கள்
ii) Electrical- 2 இடங்கள்
வயது: 35க்குள். சம்பளம்: ரூ.44,900-1,42,400.
தகுதி: சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் குறைந்தது 3 வருடத்திலிருந்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Senior Technical Assistant (Computer): 1 இடம் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.இ.,/எம்.இ., தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Upper Division Clerk: 3 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 30க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியும், கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும். மேலும் டைப்பிங், ஷார்ட் ஹேண்ட்டில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
5. Library Assistant: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 30க்குள். தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Lower Division Clerk: 16 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-4, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன்

ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அறிவுத்திறனும் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேரந்்தெடுக்கப்படுவர்.
https://rgnaunt.samarth.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2025.

The post தேசிய தொழில்நுட்ப பல்கலை.யில் குரூப் பி, சி பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article