ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்.!

6 months ago 20
சென்னை பெருநகர் பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாக பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.  வாகன நிறுத்த இடங்களில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, விதிமீறல்கள் உள்ளிட்டவை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வாகன நிறுத்த இடத்தை முன்பதிவு செய்தல், நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும் என்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.
Read Entire Article