இந்திய ரயில்வேயின் முதன் முயற்சி; இயற்கை அழகை ரசிக்க ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை: உத்தரபிரதேசத்தில் தொடங்கியது

3 hours ago 3

லக்னோ: இந்திய ரயில்வேயின் முதன் முயற்சியாக இயற்கை அழகை ரசிக்க வைக்கும் ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை உத்தரபிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் துத்வா தேசியப் பூங்காவின் 109 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்லும் வகையில் ‘விஸ்டாடோம் கோச்’ ரயில் போக்குவரத்தை நேற்று ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த ரயிலில் ெசல்லும் பயணிகள் வனப்பகுதியின் இயற்கை அழகை ரசித்துவாறு செல்லலாம். அதற்கேற்றவாறு ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கண்ணாடி கூரையுடன் கூடிய விஸ்டாடோம் பெட்டிகள், பயணிகளுக்கு வனப்பகுதியின் இயற்கை அழகையும், வனவிலங்குகளையும் எவ்வித இடையூமின்றி கண்டு ரசிக்க முடியும்.

இந்த ரயில் போக்குவரத்து முயற்சியானது, உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சேவை, துத்வா தேசியப் பூங்காவின் புலிகள், மான்கள், பறவைகள் மற்றும் அடர்ந்த பசுமையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. விஸ்டாடோம் ரயிலில் வசதியான இருக்கைகள், பெரிய ஜன்னல்கள் மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளன.

குடும்பத்தினரும் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஏற்றதாக உள்ளது. இந்த சேவையை இந்திய ரயில்வே மற்றும் உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விஸ்டாடோம்’ ரயிலில்…
‘விஸ்டாடோம்’ ரயில் பயணம் என்பது வனப்பகுதிகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பயணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயன்படுத்தப்படும் விஸ்டாடோம் பெட்டிகளானது, கண்ணாடி கூரை, பெரிய ஜன்னல்கள் மற்றும் 360 டிகிரி காட்சியை வழங்கும் வசதிகளைக் கொண்டவை. இதனால், பயணிகள் வனத்தின் இயற்கை அழகு, வனவிலங்குகள் மற்றும் பசுமையான சூழலை முழுமையாக ரசிக்க முடியும்.

புகைப்படம் எடுப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, வசதியான இருக்கைகள், சுழலும் இருக்கைகள் (சில பெட்டிகளில்), உணவு வசதிகள் மற்றும் சுத்தமான கழிவறைகள் உள்ளன. மொத்தத்தில், விஸ்டாடோம் காட்டுச் சவாரி என்பது இயற்கையை நவீன வசதிகளுடன் அனுபவிக்க விரும்புவோருக்கு தனித்துவமான பயண அனுபவத்தை வழங்கும் முயற்சியாகும்.

The post இந்திய ரயில்வேயின் முதன் முயற்சி; இயற்கை அழகை ரசிக்க ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை: உத்தரபிரதேசத்தில் தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article