'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

1 day ago 5

ஹாலிவுட் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேபோல், ஹாலிவுட் வெப் தொடருக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது டான் டிராட்சன்பெர்க் இயக்கத்தில் 5-வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். சமீபத்தில், இந்த தொடரின் 8 எபிசோடுகளின் தலைப்பு வெளியானது.

இந்த நிலையில், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' தொடரின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் எபிசோட் வருகிற நவம்பர் 26-ம் தேதியும், 2வது எபிசோட் டிசம்பர் 25-ம் தேதியும், இறுதி எபிசோட் டிசம்பர் 31-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article