
சென்னை,
சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 7-ந்தேதி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று மற்றும் வருகிற 7-ந்தேதி காலை 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல, கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 10.15, மதியம் 12.10, 1.15 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1, 1.15, 3.10 இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40, மதியம் 12.40, மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து இன்று மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.