
டாக்கா,
வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா செயல்பட்டு வந்தார். அவர் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி கட்சியின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால், ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனை தொடர்ந்து வங்காளதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பிரதமராக முகமது யூனிஸ் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனா கட்சியான அவாமி கட்சியின் மாணவர் அமைப்புக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வங்காளதேச அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவாமி கட்சியின் மாணவர் அமைப்பான வங்காளதேச ஷஸ்ரா லீகிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவாமி கட்சிக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனாவின் அவாமி கட்சிக்கு முகமது யூனிஸ் தலைமையிலான வங்காளதேச அரசு தடை விதித்துள்ளது. அவாமி கட்சி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ள வங்காளதேச அரசு அந்த கட்சியை தடைவிதித்துள்ளது.