
ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர், 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்குடன் (செக்குடியரசு) மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் தாமசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.