
வன்னியர் சங்கம் சார்பில் கடந்த 11ம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதை நான் முடிவு செய்வேன்' என்றார். மேலும், கட்சியில் நிறையபேர் உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பதாகவும் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன் என்றும் கூறினார்.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் இன்று பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, கட்சி பணி உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.