
மும்பை,
டிரம்ப் பற்றி சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவை நீக்கிவிட்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார்.
நடிகையும் அரசியல்வாதியுமானவர் கங்கனா ரனாவத். இவர் சமீபத்தில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்ற டிரம்ப்பின் கருத்தை விமர்சித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படி அந்த பதிவை கங்கனா நீக்கி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில்,
"இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த டுவீட்டை நீக்குமாறு ஜே.பி.நட்டா என்னை தொடர்பு கொண்டு கூறினார். அந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்த பதிவை இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.