வைகுண்ட ஏகாதசி விழா.. திருமலையில் ஆழ்வார் திருமஞ்சனம்

4 months ago 15

திருப்பதி:

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது.

திருமலையின் உபகோவில்கள், கோவிலுக்குள் உள்ள பூஜைப் பாத்திரங்கள், கருவறையின் கூரைகள், தூண்கள், சுவர்கள் உட்பட முழு கோவில் வளாகமும் பரிமளம் என்ற நறுமண கலவை பூசப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யும் பணி முடிந்தபிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், ஆண்டு பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முன்னதாக ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் இந்த பாரம்பரிய சமய சடங்கு கடைபிடிக்கப்படுவதாக தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, செயல் அதிகாரி சியாமளா ராவ் ஆகியோர் தெரிவித்தனர்.

Read Entire Article