
சென்னை,
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை கோவையில் நடத்தினார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த 26, 27ம் தேதிகளில் நடந்தது.
இந்த நிலையில், நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது . பனையூரில் உள்ள கட்சி அலுவலக்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் பட்டியலை கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.