
சென்னை,
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
பொது பிரிவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.600. ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6971 இடங்கள் இந்த கல்வி ஆண்டில் நிரப்பட உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, தொழில்முறை கல்வி பாட பிரிவினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசலுக்கு இட ஒதுக்கீட்டு என்று சிறப்பு இட ஒதுக்கீடுகள் பின்பற்றப்பட உள்ளது.
வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உயிர் தகவலியல் என்ற இரண்டு புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 80 மாணவர்கள் இந்த பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட உள்ளனர். ஜூன் 16 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
வேளாண்மை பல்கலைகழகம் துணை வேந்தர் நியணம் செய்ய தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது அவர்கள் பணிகளை மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.