
புதுடெல்லி,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், லுவான இந்தியாவை உருவாக்கவும் ஒன்றுபடுவோம என ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
நமது தாய்நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதில் ராணுவ வீரர்கள் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. பயங்கரவாதத்திலிருந்து நமது தேசத்தைக் காப்பாற்றும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம் நமது ஹீரோக்களை கௌரவிக்கவும், வலுவான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கவும் ஒன்றுபடுவோம். என தெரிவித்துள்ளார் .