இறைசக்தியை வாழ்வியலோடு இணைத்து, நாம் நம் வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளை சரி செய்து கொள்வது என்பது இயற்கையாக உள்ளது. இவ்வுலகில் பல திருத்தலங்கள் இருந்தாலும் நமது இடர்பாடுகளை தடுக்கக்கூடிய தலங்களை கண்டறிந்து செல்வது சிறப்பானதாகும். அவ்வாறே, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருத்தலத்தை விரிவாக காண்போம்.
வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர். இக்கோயிலில் சிம்மக்குளம் உண்டு எங்கும் இல்லாத ஒரு அனுமதி இக்கோயிலில் உண்டு சிம்மகுளத்தில் நீராடலாம் இக்கோயிலின் சிறிய வரலாறு சிவனின் அடிமுடி காண பிரம்மனும் விஷ்ணுவும் சென்றார்கள்.
நான்முகன், நான் முடியை கண்டு விட்டேன் என்ற பொய்யை கூறிவிட்டார். இதற்கு தண்டனையாக மனித உருவம் பெற்று விரிஞ்சிபுரம் இறைவனை பூஜை செய்து வந்த சிவநாத நாயனார் நந்தினி தம்பதியினருக்கு, சிவசர்மன் என்ற மனித உருவம் எடுத்தார். பிரம்மன் தனது ஐந்து வயதில் தனது அப்பாவை இழந்தார். சுவாமிக்கு பூஜை செய்யும் உரிமை உறவினர்கள் பறித்துக் கொண்டனர். சிவசர்மானின் தாயார் மனம் உடைந்து சிவபெருமானிடம் மன்றாட, சிவன் கனவில் தோன்றி பிரம்ம தீர்த்தத்தில் நீராடி காத்திருக்கும்படியாக சொன்னார்.
நான் வழிகாட்டுவேன் என்றார் மறுநாள் கார்த்திகை ஞாயிறு சிவசர்மன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி காத்திருந்தார். அம்பலமானவனாக அங்கு வந்த முதியவர், சிவசர்மனுக்கு பூணூல் அணிவித்து பிரம்ம சிவ தீட்சை கொடுத்துவிட்டு மறைந்தார். பிறகு, சிவசர்மன் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய அதை ஏற்கும் படி சிவன் தலை சாய்த்து அந்த அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இங்குள்ள மார்க்கபந்து ஈஸ்வரருக்கு நாமகரணம் செய்யும் கிரகங்கள் சூரியன் மற்றும் சனி ஆகும். மரகதாம்பிகை அம்பாளுக்கு நாமகரணம் செய்யும் கிரகங்கள் புதன் மற்றும் சந்திரன் ஆகும்.
இந்த நான்கு கிரகமும் இந்த தெய்வத்திற்கு பெயர் கொடுத்திருக்கிறது. பிள்ளை வரம் வேண்டுவோர். இக்கோயிலுக்கு சென்று மூங்கில் அரிசியில் பிரசாதம் செய்து தானம் செய்துவந்தால், பிள்ளைவரம் வெகு விரைவில் கிடைக்கும். சிறு வயதிலேயே தீர்க்க முடியாத வியாதி குழந்தைகளுக்கு இருந்தால், இக்கோயிலுக்கு சென்று அங்கு உள்ள ஏதாவது ஒரு முதியவருக்கு உணவும் உடையும் அவருக்கு தேவையானவற்றை அவர்கள் செய்து வந்தால், அந்த சிவனுக்கே செய்ததாக அர்த்தம். குழந்தைகள் நோயிலிருந்து விரைவில் குணமடைவார்கள்.
அரசியலில் வெற்றிபெற இக்கோயிலில் தங்கத்தில் ஆன சிறிய வேல் ஒன்றை இக் கோயிலில் காணிக்கையாக செலுத்தினால், அரசியலில் வெற்றி நிச்சயம். ஆட்டிசம், மூளைச்சோர்வு உள்ள குழந்தைகள் பௌர்ணமி அன்று இக்கோயில் வந்து சிம்மகுளத்தில் நீராடி இரவு தங்கிச் சென்றால் மூளை நோயிலிருந்து குணமடைவார்கள்.பிள்ளைகள் படிப்பில் வெற்றி பெற அரிசி மாவு புட்டு செய்து அதனுடன் வெல்லமும் சேர்த்து பௌர்ணமி அன்று சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து அதை தானமாக கொடுத்து வந்தால், பிள்ளைகள் படிப்பில் மிக சிறந்து விளங்குவார்கள்.சிவசர்மன், கார்த்திகை ஞாயிறு சிவனால் தீட்சை பெற்றதன் பேரில் இன்றளவும் கார்த்திகை கடைசி ஞாயிறு ‘கடை ஞாயிறு’ பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
எப்படிச் செல்வது?
வேலூர் மாவட்டத்தில் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயில் ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளில் செல்லும் பேருந்துப் பயணத்தின் மூலம் சென்று சதுவாலை என்னும் இடத்திலிருந்து நடந்தோ அல்லது மூன்று சக்கர வாகனத்திலோ சென்றால் அடையலாம்.
ஜோதிடர் திருநாவுக்கரசு
The post வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க பந்தீஸ்வரர் appeared first on Dinakaran.