புதுக்கோட்டை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிதாவது: சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழிர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.