சென்னை: தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்து பவுன் ரூ.63,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சம் கண்டது. தங்கம் விலை சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 1ம் தேதி தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.62,320க்கு விற்பனையானது. 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. 3ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.61,640 என்று குறைந்தது.
4ம் தேதி தங்கம் விலை மேலும் அதிகரித்து பவுன் ரூ.62,480க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ஒரு பவுன் ரூ.63,240க்கு விற்பனையானது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் என்ற நிலையை எட்டியது. இந்த அதிரடி விலை உயர்வை தாங்குவதற்குள் 6ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,440க்கு விற்பனையானது. இந்த விலை என்பது இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சத்தையும் முறியடித்து வரலாற்றில் புதிய உச்சம் என்ற நிலையை அடைந்தது.
தொடர்ந்து கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 வரை நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை மாற்றமின்றி கிராம் ரூ.7,930க்கும், பவுன் ரூ.63,440க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,945க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.63,560க்கும் விற்பனையானது.
இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும். வெள்ளி விலையில் மூன்றாவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.107க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000க்கு விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post தங்கம் விலை மேலும் அதிகரிப்பு பவுன் ரூ.63,560க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டது appeared first on Dinakaran.