வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு தொடர்ந்து மீன்கள் வரத்து குறைந்தாலும் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் விலை உயர்ந்துள்ளது. வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். வேலூர் மீன்மார்க்கெட்டில் உள்ளூர் நீர்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூரு, கார்வார் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
The post வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் மீன்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.