மயான கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடு

3 hours ago 2

 

வேலூர் பாலாற்றங்கரையில் வரும் 27ம் தேதி நடக்க உள்ள மயான கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் மாலை மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 26ம் தேதி மகா சிவராத்திரியும், 27ம் தேதி மயான கொள்ளை திருவிழாவும் நடக்க உள்ளது. இந்த விழாவையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றங்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும். மேலும் தேர்கள் தயார் செய்யும் பணி தொடக்கப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளனர். ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு செல்ல உள்ளனர். பலர் காளியம்மன் போல வேடமிட்டும், கையில் சூலாயுதம் ஏந்திச் செல்லவார்கள். நேர்த்திக்கடன் செலுத்த பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடியும், சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்கே உள்ள மயானத்தை அடையும்.

The post மயான கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article