வேலூர், மே 8: வேலூர் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி, 21 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநாடு வரும் 11ம்தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாகனங்கள் மூலம் மகாபலிபுரத்திற்கு வர உள்ளனர். அப்போது அசம்பாவிதங்கள் தடுக்கும் வகையில் மகாபலிபுரம் செல்லும் பிரதான சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே வடமாவட்டங்களில் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை அன்றைய தினம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளான கணியம்பாடி-வேலூர் சாலை, சென்னை-பெங்களூரு சாலை, ஒடுகத்தூர்-வேலூர் சாலை, குடியாத்தம்-காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 21 டாஸ்மாக் கடைகளை வரும் 11ம்தேதி மூட உத்தரவிட்டுள்ளதாக எஸ்பி மதிவாணன் தெரிவித்தார்.
The post வேலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி 21 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு appeared first on Dinakaran.