கொங்கணாபுரம் சனி சந்தையில் 9800 ஆடுகள், 125 டன் காய்கறிகள் விற்பனை: ரூ.5 கோடிக்கு வர்த்தகம்

19 hours ago 3

 

இடைப்பாடி: கொங்கணாபுரம் சனி சந்தையில் 9800 ஆடுகள் மற்றும் 120 டன் காய்கறிகள் விற்பனையானது. ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் சந்தை பிரசித்தம். நேற்றைய சந்தைக்கு பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் என 9,800 ஆடுகள், பந்தய சேவல், கோழிகள் மற்றும் 125 டன் காய்கறிகளை கொண்டு வந்து குவித்தனர். கேரளா, பண்ருட்டியில் இருந்து சுமார் 8 டன் பலாப்பழங்கள் வந்திருந்தது. ஒரு பழம் ரூ.150 முதல் ரூ.400 வரையிலும் விற்பனையானது.

10 கிலோ எடையுள்ள செம்மறி, வெள்ளாடு ரூ.5700 முதல் ரூ.7,800 வரையிலும், 20 கிலோ எடையுள்ள ஆடு ரூ.11,200 முதல் ரூ.14,500 வரையிலும் விற்பனையானது. ஒரு சேவல் ரூ.2500 முதல் ரூ.4000 வரையிலும் விலை போனது. கோழி ரூ.200 முதல் ரூ.1500 வரையிலும் விலை போனது. அதேபோல், தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆக மொத்தம் நேற்றைய சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கொங்கணாபுரம் சனி சந்தையில் 9800 ஆடுகள், 125 டன் காய்கறிகள் விற்பனை: ரூ.5 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Read Entire Article