வேலூர், பிப்.24: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர் குறைதீர்வு முகாம் காட்பாடியில் நேற்று நடந்தது. இதில் 900 பேர் கோரிக்கை மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம் எம்இஜி படைப்பிரினை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை களையும் பொருட்டு, காட்பாடியில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குறைதீர்வு முகாம் நேற்று காலை தொடங்கியது. இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 900 முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் பெங்களூரு எம்இஜி ஆவண காப்பகத்திலிருந்து வந்த 2 அலுவலர்கள், 4 இளநிலை அலுவலர்கள் மற்றும் 10 தரநிலை ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்று, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
The post வேலூர் உட்பட 3 மாவட்ட மாஜி படைவீரர்களுக்கு குறைதீர்வு முகாம் 900 பேர் கோரிக்கை மனு appeared first on Dinakaran.