சென்னை : வேலூரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், “கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயில், வேலூர் அருகே சென்ற போது, கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தள்ளிவிடப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்த கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளுக்கு தூப்பாக்கி ஏந்திய, இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் appeared first on Dinakaran.