வேலூர், மார்ச் 11: முதல்வர் பாதுகாப்பு பணிக்காக வேலூரில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 150 போலீசார் பயணம் மேற்கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தோறும் சென்று களஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி, வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 நாள் பயணமாக நேற்று மாலை வந்தார். தொடர்ந்து, இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வேலூர் உட்பட பல மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் இருந்து எஸ்பி மதிவாணன் தலைமையில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணிக்காக நேற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். அங்கு இன்று நடைபெறும் முதல்வர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூரிலிருந்து செங்கல்பட்டுக்கு 150 போலீசார் பயணம் முதல்வர் பாதுகாப்பு பணிக்காக appeared first on Dinakaran.