வேலூர், மார்ச் 11: சத்துவாச்சாரி புதுவசூரில் ஐடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(40). பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால் தனசேகர், தனது தாயை கடந்த 1ம்தேதி முதல் வேலப்பாடியில் உள்ள மாமியார் வீட்டில் தங்க வைத்து, தானும் உடன் இருந்து பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாலை தனசேகர் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள், துணிகள் சிதறிக்கிடந்தது. அதில் இருந்த 5 சவரன் நகை, 200 கிராம் வெள்ளி, ₹18 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது ெதரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தனசேகர், இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
The post ஐடி ஊழியர் வீட்டில் 5 சவரன் நகை, பணம் திருட்டு சத்துவாச்சாரி புதுவசூரில் appeared first on Dinakaran.