திருப்பூர்: வேலம்பட்டி சுங்கச்சாவடி பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடி ஒருபகுதி இடிக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் விவசாயிகள் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.
The post வேலம்பட்டி சுங்கச்சாவடி போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.