அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்வது சரியல்ல: திக தலைவர் கி.வீரமணி பேட்டி

2 hours ago 1

காஞ்சிபுரம்: அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்வது சரியல்ல என அண்ணா நினைவு தின கூட்டத்தில் திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட திராவிட கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அ.வெ.முரளி தலைமை தாங்கினார். மாநகர தலைவர் சிதம்பரநாதன் வரவேற்பு பேசினார். மாவட்ட காப்பாளர் அசோகன், காஞ்சி மாவட்ட செயலாளர் இளைய வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு திருடர்கள் ஜாக்கிரதை, வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

இதில், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், நிர்வாகிகள் இரா.குணசேகரன், பன்னீர்செல்வம், எல்லப்பன், பா.கதிரவன், திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், விசிக மதிஆதவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.பின்னர், திக தலைவர்கி.வீரமணி, நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வளர்ச்சியில் தமிழகம் அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் பேரிடர் வரும் பொழுது அதற்கு ஒரு துளி பணம் தராமல் இருப்பது ஒன்றிய அரசின் அடாவடி போக்கு.

அரசியலமைப்பு சட்டம் 163 பிரிவின்படி அமைச்சரவையில் என்ன முடிவு செய்யப்படுகிறதோ அதை செயல்படுத்த வேண்டியது ஆளுநர் கடமை. அரசாங்கத்தில் அவருக்கு இடமில்லை. அமைச்சரவையின் ஒரு பகுதியாகத்தான், அரசியல் சட்டம் ஆளுநரை வைத்துள்ளது. அதை ஆளுநர் மீறுகிறார் என்றால் அரசியல் சட்டத்தை மீறுகிறார். அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசியல் சட்டப்படி ஆளுநர் செய்வது சரியல்ல: திக தலைவர் கி.வீரமணி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article