தேவதானப்பட்டி, மார்ச் 11: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ராமர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் தவப்பாண்டி(27). நேற்று முன்தினம் இரவு கெங்குவார்பட்டியில் இருந்து ஜி.மீனாட்சிபுரம் பிரிவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த வேன் மோதியதில் தவப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது தந்தை முருகன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வேன் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.