
லாகூர்,
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மகாணம் லாகூரில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது.
பஸ் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவர் உறங்கியுள்ளார். இதனால், சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.