
சென்னை,
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியானது.இப்படத்துக்கு கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு இளைஞன் பணியன் அணிந்துக் கொண்டு வீட்டு வாசலில் நிற்கிறான். அவன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கோவிலில் நாய் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர். 'மெட்ராஸ் மேட்னி' படம் திரையரங்குகளில் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. 'என்னடா பொல்லாப்பு இது' எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இப்பாடல் வரும் 19ம் தேதி வெளியாகிறது.