
பாட்னா,
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள மிதிலா பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் விடுதியில், மாணவர்களை சந்தித்து உரையாட இருந்தார். ஆனால் ராகுல் காந்தியின் காரை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ராகுல் காந்தி காரில் இருந்து இறங்கி நடந்து சென்று மாணவர்களை சந்தித்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியதற்காக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
"தலித், பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மணாவர்களுடன் தொடர்பு கொள்வது அரசியலமைப்புக்கு எதிரானதா? அவர்களின் படிப்பு, தேர்வுகளுக்கான தேவைகள், வேலைகள் பற்றி அவர்களுடன் பேசுறது பாவமா? பீகாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வதை ஐக்கிய ஜனதா தளம்- பாஜக அரசு தடுத்தது சர்வாதிகாரத்தின் உச்சம்."
இவ்வாறு கார்கே குறிப்பிட்டுள்ளார்.